Shanmugan Murugavel / 2026 மே 20 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில் 22 ஆண்டுகளின் பின்னர் ஆர்சனல் சம்பியனானது.
போர்ண்மெத்துடனான போட்டியை புதன்கிழமை (20) மன்செஸ்டர் சிற்றி சமப்படுத்தியமையையடுத்தே ஆர்சனல் சம்பியனாவது உறுதி செய்யப்பட்டது.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் இன்னுமொரு போட்டி மீதமிருக்கையில் 82 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஆர்சனலும் 78 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றியும் காணப்படுகின்ற நிலையில் அடுத்த போட்டியில் ஆர்சனல் தோற்று சிற்றி வென்றாலும் அதிகபட்சமாக 81 புள்ளிகளையே சிற்றி பெறலாம் என்ற நிலையிலேயே ஆர்சனல் சம்பியனாவது உறுதியானது.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பருடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றது. செல்சி சார்பாக என்ஸோ பெர்ணாண்டஸ், அன்ட்ரே சன்டோஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில், டொட்டென்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை றிஷலிஷன் பெற்றிருந்தார்.
6 hours ago
7 hours ago
20 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
20 May 2026