2021 மே 15, சனிக்கிழமை

326 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 07 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 320 ஓட்டங்களை பாகிஸ்தான் பெற்றுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், செஞ்சூரியனில் இன்று நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணித்தலைவர் தெம்பா பவுமா, பாகிஸ்தானை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார். பாகிஸ்தான் சார்பாக சுழற்பந்துவீச்சாளர் உஸ்மான் குவாதிர் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டார்.

இந்நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய பாகிஸ்தான், இமாம் –உல்-ஹக், பக்கர் ஸமன் மூலம் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றதுடன், கேஷவ் மஹராஜ்ஜிடம் இமாம்-உல்-ஹக் வீழ்ந்தபோதும், பக்கர் ஸமன் மற்றும் அணித்தலைவர் பாபர் அஸாமின் இணைப்பாட்டம் மூலம் பலமான நிலையில் பாகிஸ்தான் இருந்தது.

எனினும், மஹராஜ், ஜெ.ஜெ. ஸ்மட்ஸ், ஏய்டன் மர்க்ரமிடம் அடுத்தட்டு விக்கெட்டுகளைப் பறிகொடுத்த பாகிஸ்தான், இறுதியில் ஹஸன் அலியின் ஆட்டமிழக்காத 32 (11) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 320 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில், பக்கர் ஸமன் 101 (104), பாபர் அஸாம் 94 (82), இமாம்-உல்-ஹக் 57 (73), ஹஸன் அலி ஆட்டமிழக்காமல் 32 (11) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மஹராஜ் 3, மர்க்ரம் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .