2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா

Suganthini Ratnam   / 2017 ஜூன் 01 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 21ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா புதிய வேந்தர், வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜாவின் பிரசன்னத்துடன் எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது என  அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, வந்தாறுமூலை வளாகத்தில் அமைந்துள்ள நல்லையா மண்டபத்தில் முற்பகல் மற்றும் பிற்பகல் நேர அட்டவணைப்படி நான்கு அமர்வுகளாக இந்தப் பட்டமளிப்பு விழா நடைபெறும்.

மட்டக்களப்பு, வந்தாறுமூலை, திருகோணமலை ஆகிய வளாகங்களைச் சேர்ந்த உள்வாரி மற்றும் வெளிவாரி பட்டப்படிப்பைப் பூர்த்திசெய்தோர்;, இதன்போது பட்டம் பெறவுள்ளனர்.

கலை கலாசாரப்பீடம், சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானபீடம், சித்த மருத்துவ கற்கைகள் பிரிவு, வணிக முகாமைத்துவபீடம், விவசாயபீடம், தொடர்பாடல் மற்றும் வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞானபீடம், சுவாமி விபுலானந்தா அழகிய கற்கைகள் நிறுவனம் ஆகியவற்றில் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்வர்கள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

அதிகூடிய அளவாக கலை, கலாசாரத்துறையில் கற்ற 450 பேரும், வைத்தியத்துறையில் 50 பேரும், வி;வசாயத்துறையில் 11 பேரும், சித்த மருத்துவத்துறையில் 10 பேரும் உட்பட மொத்தம் 852 பேர் பட்டங்களைப் பெறுகின்றனர் எனவும் அவர் கூறினார்.  

கடந்த காலத்தில் இரண்டு நாட்கள் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டு வந்தது. கடந்த  ஆண்டு முதல் பட்டமளிப்பு விழா ஒரே நாளில் 4 அமர்வுகளாக நடத்தப்பட்டு வருகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .