2021 ஜூன் 24, வியாழக்கிழமை

குருபூஜையும் இந்து சமய எழுச்சி ஊர்வலமும்

Sudharshini   / 2016 மார்ச் 13 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். பாக்கியநாதன்,வா.கிருஸ்ணா

அறுபத்து மூன்று நாயன்மார்களின் குருபூஜையும் இந்து சமய எழுச்சி ஊர்வலமும் மட்டக்களப்பு நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்றது.

அறுபத்து மூன்று நாயன்மார்கள் அறப்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் சக்தி கே. குமாரதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், அறிநெறிப்பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், இந்து அமைப்புக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கோட்டைமுனை வீரகத்திப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமான ஊர்வலம், நகர மணிக்கூட்டக் கோபுரம் வரை சென்று திருமலை வீதி, தாரைக்கேணி வீதி விழியாக மகா மாரியம்மன் ஆலயத்தைச் சென்றடைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .