2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

நீர் விநியோகக் குழாய் வெடிப்பு : ஏறாவூரில் நீர், மின்சாரம் தடை

Yuganthini   / 2017 மே 21 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் - அல்முனீறா மகா வித்தியாலய வீதியிலுள்ள, பிரதேசத்துக்கான நீர் விநியோகக் குழாய், இன்று(21) அதிகாலை 3 மணியளவில் வெடித்துச் சிதறியதில், வீதியும் குடியிருப்புப் பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியுள்ளதுடன், பிரதேசத்துக்கான நீர் மற்றும் மின்சார விநியோகமும் தடைப்பட்டுள்ளது.

குறித்த நீர் விநியோகக் குழாய் ​வெடிப்புக்குள்ளான பிரதேசத்தில், நீர் வேகமாகப் பாய்ந்ததால், அவ்விடத்தில் சுமார் 6 அடி ஆழத்துக்கு பாரிய குழி தோன்றியுள்ளது.

எவ்வாறாயினும், நீர்க் குழாயின் திருத்தப் பணிகளுக்காக, சில மணி​நேரங்கள் தடை ஏற்படுத்தப்பட்டிருந்த நீர் விநியோகமும் மின்சார விநியோகமும், குழாயின் திருத்தப் பணிகளை அடுத்து மீளச் செயற்படுத்தப்பட்டதாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .