2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

பட்டதாரிகளை ஆசிரியர் வெற்றிடங்களுக்கு உள்வாங்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2017 மே 24 , பி.ப. 02:49 - 1     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், கே.எல்.ரி.யுதாஜித்

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர் வெற்றிடங்களுக்கு உள்வாங்குவதற்கான பூர்வாங்க  நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது என மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (23)  நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானத்துக்கு  அமைய கட்டம், கட்டமாக வேலையற்ற  பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கை  முன்னெடுக்கப்படும்.  

மேலும், வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர் வெற்றிடங்களுக்கு உள்வாங்குவதற்காக மாகாணக் கல்விப் பணிப்பாளரால் கடந்த சில நாட்களாக திரட்டப்பட்ட தரவுகள்  தன்னிடம் செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டதுடன்,  அதற்கமைய  இம்மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் எனவும் அவர் கூறினார்.

நியமனங்களுக்கு வெட்டுப்புள்ளிகளைக் குறைத்துப் பட்டதாரிகளை உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டதாரிகளை உள்வாங்கிய பின்னர், குறித்த பாடங்களுக்கு மேலும் வெற்றிடங்கள் காணப்பட்டால்,  பரீட்சையின்றி பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதற்கும்  தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 1

  • Ayunoos Thoppur Thursday, 25 May 2017 10:21 AM

    ஏப்ரல் மாத கடைசியில் ஆளனி மற்றும் பட்டதாரி பிரச்சினைகளை நிவா்த்தி செய்வேன் என வாக்குறுதி அளித்தீா்களே! அதுபோன்ற ஒரு வாக்குறுதியா இது? ஏன் ஆளனி சம்பந்தமாக இந்தச் சந்தா்ப்பத்தில் ஏதும் கூறவில்லை. அப்ப அந்த வெற்றிடங்களின் நிலைமை என்ன?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .