2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

பிரபல சட்டத்தரணியின் வீட்டில் திருட்டு

வா.கிருஸ்ணா   / 2017 மே 28 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, செல்வநாயகம் வீதியை அண்டி அமைந்துள்ள பிரபல சட்டத்தரணியொருவரின் வீட்டில்; இன்று அதிகாலை திருட்டுப் போயுள்ளது என்று மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.  

வீட்டின் மேல் மாடியிலுள்ள ஜன்னல் கதவுகளைக் கழற்றிக்கொண்டு நுழைந்த திருடர்கள் தங்கநகைகள், அலைபேசி, பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளனர் எனவும் பொலிஸார் கூறினர்.

இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் மோப்பநாய் சகிதம் விசாரணையைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .