2021 ஜூன் 24, வியாழக்கிழமை

பாசிக்குடாவில் விழுந்த இரும்புத்துண்டு களுவாஞ்சிக்குடியில் மீட்பு

Gavitha   / 2016 டிசெம்பர் 23 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம், எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பு பாசிக்குடா கடல் பகுதியில் விமானத்தின் பாகம் என்று கருதப்படும் பாரிய பொருள் ஒன்றை, இன்று காலை, களுவாஞ்சிகுடி கடல் பரப்பில் வைத்து கடல் படையினர் மீட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

கிழக்கு கடலில் மர்மமான பொருள் ஒன்று காணப்படுவதாக, மீனவர்கள் அண்மையில் தெரிவித்திருந்தனர். அது விமானத்தின் பாகமாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.

எனினும் அந்தப் பகுதிக்கு சென்ற கடல் படையினர், அவ்வாறான எதுவும் அங்கு காணப்படவில்லை என்று தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அந்தப் பாகம், காத்தான்குடி கடலில் இருந்து, கல்முனை நோக்கி மிதந்து செல்வதாக நேற்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்தத் தகவலையடுத்து, குறித்த பகுதிக்குச் சென்ற கடற்படையினர், விமானத்தின் பாகம் ஒன்றை மீட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் பல்வேறு ஊகங்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது விமானத்தினுடைய பாகம் என்று கருதப்படும் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .