2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

வாழ்வாதார உதவிகளுக்கான நேர்முகத்தேர்வு

Princiya Dixci   / 2015 நவம்பர் 23 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
 
கடந்த கால யுத்த சூழ்நிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வாழ்வாதார உதவிகள் மற்றும் வீடமைக்கு கடன்களை வழங்கும் வகையில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான நேர்முகத்தேர்வு, மட்டக்களப்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் டேபா மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (23) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவுசெய்யப்பட்ட 74 பேருக்கு வாழ்வாதார உதவிகளும் 55 பேருக்கு வீட்டுக்கடன்களையும் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு நடைபெற்றது.
 
இந்த நேர்முகத்தேர்வு நிகழ்வில் புனர்வாழ்வு அபிவிருத்தி திணைக்களத்தின் வேலைத்திட்ட பணிப்பாளர் கே.புகேந்திரன், பிரதிப்பணிப்பாளர்களான பதூர்தீன், ஹுசைன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் உட்பட இலங்கை வங்கியின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
 
இந்நேர்முகத்தேர்வின் போது புதிய விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .