2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு மட்டு. சிறையில் இருந்து 13 பேர் விடுதலை

Kogilavani   / 2011 செப்டெம்பர் 15 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.எஸ்.வதனகுமார், சுக்ரி)

சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பிக் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 13 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

சிறைக்கைதிகள் தினம் கடந்த 12 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அத் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து சிறுகுற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வந்த கைதிகள் விடுதலை செய்யப்படும் நிலையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 13 பேர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர்.

குறித்த 13 பேருக்கும் போக்குவரத்து கொடுப்பனவு வழங்கி மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் கிச்சிறி பண்டார, பிரதான சிறையதிகாரியான எஸ்.இந்திரகுமார், சிறைச்சாலை அதிகாரி ஆர்.போகனதாஸ் ஆகியோர் தத்தம் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .