Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு, கிராண் பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாவடிவேம்பு பகுதியில் காணி உறுதிப்பத்திரம் இல்லாத சுமார் 170 பேருக்கு அலரிமாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி வைத்தார்.
கிழக்கு மாகாணத்திலுள்ளவர்களில் சிலருக்கு காணிகள் உள்ளன. ஆனால், அக்காணிகளுக்கான காணிஉறுதிப்பத்திரங்கள் அவர்களிடம் இல்லை. இந்த நிலையில், அவர்களுக்கான காணிஉறுதி வழங்குமாறு மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விடுத்த வேண்டுகோளுக்கமைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காணிஉறுதிப்பத்திரங்களை வழங்கினார்.
இதேவேளை, காணி உறுதிப்பத்திரம் இல்லாதிருந்த சுமார் 600 பேருக்கு காணிப் உறுதிப்பத்திரங்கள் பெற்றுக்கொடுத்துள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்கள் இல்லாத சுமார் 10,000 பேருக்கு காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
46 minute ago
02 Jul 2025