2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

காலாவதியான பொருட்களை வைத்திருந்த கோப் சிற்றி முகாமையாளருக்கு அபராதம்

Super User   / 2010 ஓகஸ்ட் 29 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சிஹாரா லத்தீப்)


மட்டக்களப்பு சித்தாண்டி வண்ணாக்கர் வீதியில் உள்ள கோப் சிற்றி கடையில் காலாவதியான பொருட்களை வைத்திருந்த முகாமையாளருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி இன்று 5000 ரூபா அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டார்.

குறித்த கோப் சிற்றியில் காலாவதியாகி பாவனைக்குதவாத நிலையில் இருந்த   பிஸ்கட், பால்மா பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சுகாதார பரிசோதகர் திருநவன் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த முகாமையாளர் குற்றப் பத்திரிகையை ஏற்றுக் கொண்டதை அடுத்து நீதிபதி வீ.ராமகலவன் தண்டப் பணம் விதித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .