Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 01 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எல்.தேவ்.)
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் இன்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளொன்று மரத்துடன் மோதியதால் மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலியானார்.
இன்று புதன்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பெரியகல்லாறு 2 ஆம் குறிச்சி, காந்தி வீதியை சேர்ந்த பொன்னையா சதானந்தம்(56வயது)என்ற குடும்பஸ்த்தரே பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கோட்டைக்கல்லாறுக்கு சென்று விட்டு பெரியகல்லாறில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது பெரியகல்லாறு மெதடிஸ்த தேவாலயத்துக்கு அருகில் இருந்து வீட்டு மதிலுடன் மோதிய நிலையில் குறித்த இடத்திலேயே பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெரியகல்லாறு வைத்தியசாலைக்கு குறித்த குடும்பத்தஸ்தரின் சடலம் கொண்டு செல்லப்பட்டு மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
23 Jan 2026
23 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Jan 2026
23 Jan 2026