2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

போலி மின் ஆளிகள் கண்டுபிடிப்பு

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 02 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிபாயா நூர்)

வர்த்தக இலச்சினையொன்றை போலியாக பொறிக்கப்பட்டு காத்தான்குடி பிரதேசத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்த பெருந்தொகையான மின் ஆளிகளை (சுவிட்ச்) பொலிஸார் இன்று காலை கைப்பற்றியுள்ளனர்.

இந்த போலி மின் சுவிற்சுக்களை விற்பனை செய்த காத்தான்குடியிலுள்ள  வர்த்தக  நிலையமொன்றை முற்றுகையிட்ட காத்தான்குடிப் பொலிஸார் அங்கிருந்து மேற்படி போலி ஆளிகளை கைப்பற்றியதுடன் இதன் போது நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாகவும் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குணவர்த்தன தெரிவித்தார்.

இதன்போது கைது செய்யப்பட்டவர்களையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட பொருட்களை ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .