2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

வாகரை பஸ், வாழைச்சேனை பஸ் நிலையத்திற்கு வராதா?

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 02 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)

வெருகலுக்கும் வாழைச்சேனைக்கும் இடையில் வாகரை இ.போ.ச. டிப்போவினால் நடத்தப்படும் பஸ் சேவை குறித்து பயணிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

வெருகலுக்கும் வாழைச்சேனைக்கும் இடையில் நடைபெறும் இச்சேவையானது வாழைச்சேனை பஸ் நிலையம் வரை நடைபெறாமல் பொது மைதானத்துடன் திரும்பி விடுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பிற்கும் வாழைச்சேனைக்கும் இடையிலான இ.போ.ச. மற்றும் தனியார் பஸ் சேவைகள் யாவும் வாழைச்சேனை பஸ் நிலையம் வரை சேவையில் ஈடுபடும்போது வாகரை இ.போ.ச. பஸ்கள் மட்டும் வாழைச்சேனை பஸ் நிலையம் வரை சேவையில் ஏன் ஈடுபடுவதில்லை என வினா எழுப்பும் பயணிகள், அரசாங்க ஊழியர்கள் உட்பட பலரும் இதனால் சிரமங்களை எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டுகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .