Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 03 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ராக்கி)
வடகிழக்கு தமிழ் மக்களின் அவலங்கள் தொடர்பாகவும் இந்துமக்களின் நிலைமைகள் தொடர்பாகவும் விளக்கவுள்ளதுடன் ஆன்மீக சொற்பொழிவுகளையும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குறிப்பிட்டார்.
சைவ ஆலயங்களின் ஒன்றியத்தின் லண்டன் அமைப்பின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக கலந்துகொள்ளும் முகமாக இன்று பயணமாகும் நாடாளுமன்ற உறுப்பினர் நான்காம் திகதி தொடக்கம் ஐந்தாம் திகதி வரை ஆன்மீக சொற்பொழிவு ஆற்றவுள்ளதுடன், இந்து மதப் பிரதிநிதிகள், புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள், பிரதிநிதிகளை சந்தித்து யுத்த சூழ்நிலையில் மக்கள் எதிர்நோக்கிய சிக்கல் நிலை தொடர்பாகவும் அதன் பின்னரான நிலைப்பாடு தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடவுள்ளதுடன் , 11 ஆம் திகதி ஜேர்மனியில் நடைபெறும் உலகத் தமிழர் தாயகத்தின் தமிழர் பண்பாட்டு மகாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தமிழரின் பண்பாட்டுக்கு சவாலாய் அமைந்துள்ள விடயங்கள் பற்றி விரிவாக உரையாற்றவுள்ளார்.
13 ஆம் திகதி பாரதீய ஜனதாக் கட்சி நீண்ட நாள்களாக விடுத்திருந்த அழைப்புக்கமைய, இந்தியா கோயம்புத்தூரில் இடம்பெறும் இந்துமதக் கட்சியும் விசுவஹிந்து பரிசத் இணைந்து நடத்தும் ஆவணி சதுர்த்தி மகாநாட்டில் கலந்து கொண்டு 15 ஆம் திகதி விநாயகர் உருவச்சிலை கடலுக்குக் கொண்டும் செல்லும் நிகழ்வில் பிரதம அதிதியாகவும் கலந்து கொண்டு ஆன்மீக சொற்பொழிவாற்றவுள்ளார். 18 ஆம் திகதி அவர் நாடு திரும்பவுள்ளார்.
8 hours ago
8 hours ago
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
14 Nov 2025
14 Nov 2025