2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

மதம் மாறியவரின் சடலத்தைப் புதைப்பதில் சர்ச்சை

Super User   / 2010 செப்டெம்பர் 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ராக்கி)

வாகரை மாங்கேணி பகுதியில் மதம் மாறிய ஒருவரின் உடலைப் புதைப்பதில் இந்து, கிறிஸ்தவ மயானங்களில் அனுமதியளிக்கப்படாததால் பொலிஸாரின் உதவியை நாடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

45 வயதான குடும்பஸ்தர் ஒருவர் ஒரு மாதங்களுக்கு முன்பு இந்து சமயத்திலிருந்து றோமன் கத்தோலிக்கம் அல்லாத ஒரு கிறிஸ்தவ சபையின் மதத்தைத் தழுவியிருந்தார்.

 நேற்று வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார். இந்நிலையில், மேற்படி இரு மயானங்களிலும் இறந்தவரின் உடலை புதைக்க அனுமதி வழங்கப்படாததால் இறந்தவரின் உறவினர்கள் மாங்கேணி பொலிஸாரின் உதவியை நாடினர். பின்னர்  இது தொடர்பாக வாகரை  பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது.

வாகரை கிராமசேவையாளரின் ஆலோசனையைப் பெற்று இவ்விடயத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என  வாகரை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று காலை இந்து மயானத்தில் சடலத்தைப் புதைப்பதற்கு இணக்கம் காணப்பட்டதையடுத்து சடலம் அங்கு புதைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .