2021 ஜூன் 19, சனிக்கிழமை

காணாமல் போயுள்ள மாநகரசபை உறுப்பினரை கண்டுபிடிப்பதற்கு விசேட பொலிஸ் குழு

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 07 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிபாயா நூர்)

காணமல் போயுள்ள மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினரை கண்டு பிடிப்பதற்காக விசேட பொலிஸ் குழுவொன்றை நியமித்துள்ளதாக கிழக்கு மாகாண  பிரதிப் பொலிஸ் மா அதிபர் விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சகாயமணி காணாமல் போனது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.

இதற்காக விசேட பொலிஸ் குழு வொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று காணாமல் போயுள்ளவரின் மனைவியின் மேலதிக வாக்கு மூலங்களை பதிவு செய்வதற்காகவும் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உட்பட மூன்று பேர் கொண்ட பொலிஸ் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இவரின் வீட்டுக்கு சென்று அவரின் மனைவியின் வாக்கு மூலங்களை பதிவு செய்வார்கள் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .