2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

கொக்கட்டிச்சோலையில் ஆயுதங்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 08 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார், டி.எல்.ஜவ்பர்கான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த 2 ஆம் திகதி ஒரு தொகுதி ஆயுதங்கள் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

தேடுதல் பணிகளில் கொக்கட்டிச்சோலை புழுவன்மடு பகுதியில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனடிப்படையில், 20 கிலோ நிறையுடைய சக்திவாய்ந்த குண்டு ஒன்று, எஸ்எல்.ஆர் துப்பாக்கி ரவைகள் 360, கைக்குண்டுகள் 05, மொட்டரோலோ செட்-01, வாக்கிடோக்கிகள், அன்டனா போன்றவைகள் மீட்கப்பட்டதாகவும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் தொடர் தேடுதல் நடவடிக்கையில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறினர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .