2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

விவசாய காணிகளிலுள்ள பற்றைகளை அகற்ற முடியாதுள்ளதாக விசனம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 08 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)
 
மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்திலுள்ள கட்டுமுறிவு, மாணிக்கம் மற்றும் தோணிதாண்டமடு ஆகிய கிராமங்களில் விவசாயச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தமது காணிகளிலுள்ள  பற்றைகளையும், பற்றைக் காடுகளையும் வெட்டி அகற்ற முடியாதிருப்பதாக புகார் தெரிவிக்கின்றார்கள்.
 
வன இலாகா அதிகாரிகளினால் இதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கமநல சேவை அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர்
 
எதிர்வரும் பெரும் போக வேளாண்மைச் செய்கைக்கான உழவு வேலைகளை ஆரம்பிப்பதற்கான முன்கூட்டிய நடவடிக்கையாக காடுகளையும் பற்றைகளையும் வெட்டி அகற்ற வேண்டும் ஆனால் வன இலாகா அதிகாரிகளினால் விதிக்கப்பட்ட தடை காரணமாக தங்களால் விவசாயச் செய்கையில் ஈடுபடமுடியாதிருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்க்கின்றார்கள்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .