Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 08 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிபாயா நூர்)
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க இன்று புதன்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்து மட்டக்களப்பு பல்சமய ஒன்றியப் பிரதிநிதிகளை சந்தித்தார்.
மட்டு. திருமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளையின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச் சட்டம் இதில் மக்கள் விடுதலை முன்னணி எடுத்துள்ள நிலைப்பாடு போன்றவற்றை இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க பல்சமய ஒன்றியப் பிரதிநிதிகளிடம் எடுத்துக் கூறினார்.
ஜனாதிபதியின் நடவடிக்கை நல்லிணக்கத்தையோ தேசிய ஒற்றுமையையோ இந்த நாட்டில் ஏற்படுத்துவதாக தெரியவில்லையென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்தார்.
இச்சந்திப்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சோமவன்ஸ அமரசிங்க 18 ஆவது அரசியல் யாப்பு மாற்றம் அதற்கு முன்னரான சகல திருத்தங்களையும் நீக்கிவிட்டு ஒரு தனிமனிதனுக்கு சகல அதிகாரங்களையும் குவிக்கும் ஒரு
நடவடிக்கையாகும்.
இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் இது பேராபத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும்.
மக்கள் விடுதலை முன்னணி நிறைவேற்று அதிகாரத்திலுள்ள ஜனாதிபதி முறையை மாற்றி அதிகாரப்பகிர்வு இல்லாமல் அதிகாரப்பரவலாக்கள் என்பதையே வலியுறுத்தி நிற்கின்றது.
இதனாலேயே 18 ஆவது அரசியல் யாப்பு மாற்றத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.
இலங்கையிலுள்ள சகல மக்களையும் சந்தித்து அவர்களை ஐக்கியப்படுத்தி இந்த அரசியல் யாப்பு பற்றி மக்கள் விடுதலை முன்னணி தெளிவுபடுத்தி வருகின்றது.
அதில் ஒரு கட்டமாகவே உங்களையும் சந்திக்கின்றேன் என்றார்.
இதன்போது, தமிழ் மக்களுக்கெதிராக மக்கள் விடுதலை முன்னணி கடந்த காலங்களில் எதிராக நடந்து கொண்டதையும் தற்போது வடக்கு கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் தொடர்பாகவும் மட்டக்களப்பு பல்சமய ஒன்றிய பிரதிநிதிகள் சோமவன்ஸ அமரசிங்கவிடம் சுட்டிக்காட்டினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago
6 hours ago