Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 09 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ்.வதனகுமார்)
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய மஹோற்சவ பெருவிழா இன்று 9ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் 19 தினங்கள் இடம்பெறவுள்ளதுடன் தினமும் சுவாமி உள்வீதி வெளிவீதி திரு உலா இடம்பெறுவதோடு தம்ப பூஜை மற்றும் வசந்த மண்டபபூஜைகளும் இடம்பெறும்.
26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00மணிக்கு தேரோட்டப் பெருவிழாவும் இரவு 7.00மணிக்கு வீரபத்திர ஆலய முன்றிலில் திருவேட்டை திருவிழாவும் இடம்பெறும்.
27ஆம் திகதி அதிகாலை 5.00மணி தொடக்கம் திருப்பொற்சுன்னம் இடித்தல் நிகழ்வு இடம்பெற்று தீர்த்தோற்சவம் இடம்பெற்றும். அதனைத்தொடர்ந்து மாலை 6.00மணிக்கு திருக்கல்யாணம், பொன்னூஞ்சல் இடம்பெற்று கொடியிறக்கலுடன் வருடாந்த உற்சவம் நிறைவுறும்.
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago