2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடியில் நோன்புப் பெருநாள் பஸார்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 09 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.எல்.ஜவ்பர்கான்)

புனித நோன்புப் பெருநாளையொட்டி காத்தான்குடி நகரில் நகரசபை அனுசரணையுடன் பெருநாள் பஸார் ஹிஸ்புல்லாஹ் பொது விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டு வருகின்றது.

வழமைபோன்று இம்முறையும் புதிய காத்தான்குடி முகைதீன் பெரிய பள்ளிவாசலின் அனுசரணையுடன் இப்பஸார் அமைக்கப்படுவதாக காத்தான்குடி நகரசபை தலைவர் மர்சூக் அஹமட் லெப்பை தெரிவித்தார்.

சுமார் 100 விசேட பெருநாள் கடைகள் இப்பஸாரில் அமைக்கப்பட்டு வருகின்றன.

பெருநாள் தினத்தன்று பிற்பகல் 3 மணியளவில் திறக்கப்படும் இக்கடைகள் தொடர்ந்து 3 தினங்களுக்கு திறந்திருக்கும். இப்பஸாருக்கு பெண்கள் வருவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .