2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

மாநகரசபை உறுப்பினர் காணாமல் போனமை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது - சந்திரகாந்தன்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 13 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)
 
மர்மமான முறையில்காணாமல் போயுள்ள தமது கட்சியைச் சேர்ந்த மாநகர சபை உறுப்பினர் பிரகாசம் சகாயமணி தொடர்பாக 20 நாட்கள் கடந்து விட்டபோதிலும் இது வரை எவ்வித சாகமான முடிவுகளும் கிடைக்கவில்லை என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் 'தமிழ்மிரருக்கு ' தெரிவித்தார்.
 
கடந்த 22ஆம் திகதி முதல் குறித்த மாநகர சபை உறுப்பினர் காணாமல் போயிருப்பது மக்கள் மத்தியல் ஒரு வித அச்சததையும் பீதியையும் ஏற்படுத்தியள்ளதாகவும் அவர் தெரிவித்தார். "இது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்து விசாரணைகளை மேற்கொண்டு கண்டு பிடித்து தருமாறு கேட்டுள்ள போதிலும் இது வரை சாதகமான முடிவு கிடைக்கவில்லை.

இப்போது கிழக்கு மாகாணம் முழுமையாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது இந் நிலையில் இதற்கு யார் பொறுப்பு என்பதை சட்டம் ஒழுங்கை அமுல் படுத்தும்பாதுகாப்பு தரப்பினரே பொறுப்பு கூற வேண்டும். " உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டக்களப்புக்கு வருகை தரும் நிலையில் மாநகரசபை உறுப்பினர் காணாமல் போன விவகாரம் அவர்களையும் அச்சத்துக்குள்ளாக்கியுள்ளது எனவும் முதலமைச்சர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .