2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

காட்டுத் தடிகளுக்குப் பதிலாக உலோகக் குழாய்களை பயன்படுத்த வேண்டும்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 14 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் காவல் குடிசைகளை அமைப்பதற்கு காட்டுத் தடிகளை பயன்படுத்துவதற்கு பதிலாக உலோகக் குழாய்களை பயன்படுத்துவதற்கு முன்வர வேண்டும் என மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் விவசாயிகளைக் கேட்டுள்ளார்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் காடுகளில் தடிகளை வெட்டுவதற்கு வனபரிபாலன திணைக்களம்  தடை விதித்துள்ளதால் தங்களால் வயல்களில் காவல் குடிசைகளை அமைக்க முடியாதிருப்பதாக விவசாயிகள் அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்தபோதே இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார்.
 
"வருங்கால சந்ததியினரின் நலன் கருதி காட்டு வளம் பேணி பாதுகாக்கப்பட வேண்டும். இதன் காரணமாகவே காட்டு மரங்களையோ தடிகளையோ வெட்டுவதற்கு அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
விவசாயிகளைப் பொறுத்தவரை நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்ப விவசாயச் செய்கையையும் மாற்றி அமைத்துக் கொள்கின்றார்கள். அந்த அடிப்படையிலேயே காவல் குடிசைகளுக்கும் உலோகக் குழாய்களைப் பயன்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .