2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

வீதிகளில் குப்பை கொட்டுபவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் மாநகரசபைக்கு தொடர்பில்லை - மட்டு. துணைத்தலைவ

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 14 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)
 
மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் வீதிகளில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு எதிராக பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைக்கும் மாநகர சபைக்கும் தொடர்புகள் இல்லை என மட்டக்களப்பு மாநகர துணை முதல்வர் ஜோர்ஜ் பிள்ளை தெரிவிக்கின்றார்
 
வீடுகளில் சேரும் கழிவுகள் மற்றும் குப்பைகளைக் அகற்றுவதற்கு  மாநகர சபையினால் போதிய ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டாத நிலையில் பொலிஸாரால் மேற்கொள்ளப்படுகின்ற சட்ட நடவடிக்கைகள் காரணமாக பொது மக்கள் இக் கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
 
இது தொடர்பாக மாநகர துணை முதமல்வர் ஜோர்ஜ் பிள்ளை  யை தொடர்பு கொண்டு கேட்ட போது
"வீதிகளில் குப்பைகளை கொட்டுபவர்கள்  நீதிமன்றம் முன்ஆஜர் படுத்தப்பட்டு தண்டனை வழங்கப்படுகின்றது.  பொலிஸாரால் மேற் கொள்ளப்படுகின்ற இந்த  சட்ட நடவடிக்கையானது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற  நடவடிக்கையாகும்." என்றார்
 
தொடர்ந்தும் இது தொடர்பாக தெரிவித்த அவர், "வீதிகளில் குப்பைகள் போடக் கூடாது என மக்களின் பார்வைக்கு அறிவித்தல் கள் வைக்கப்பட்டுள்ளன. அப்படியிருந்தும் மக்கள் தொடர்ந்தும் வீதிகளில் குப்பைகளை கொட்டுகின்றார்கள். குப்பைகளை அகற்றுவது தொடர்பாக மாநகர சபை வாகனப் பற்றாக்குறை மற்றும் ஆளனிப் பற்றாக்குறை போன்றவற்றை தற்போது எதிர் நோக்குகின்றது. இருப்பினும் எதிர் காலத்தில் இவற்றை நிவர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.
 
மக்களுக்கு சேவையாற்றுவதே மாநகர சபையின் நோக்கமே தவிர மக்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதோ அல்லது தண்டனைக்குள்ளாக்குவதோ அதன் நோக்கமல்ல .
 
சட்டத்தை மக்கள் பேணி வேண்டும். சட்டம் அமுலாக்கப்படும் போது அதனை அனுசரித்து மக்கள் நடந்து கொள்ள வேண்டும் மக்களின் கருத்துக்களையும் ஆலோனைகளையும் பெற்று குப்பைகளை அகற்றுவது தொடர்பாக வேலைத் திட்டங்களை முன்னெடுக்க மாநககர சபை உத்தேசித்துள்ளது" என்றும் குறிப்பிட்டார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .