2021 ஜூன் 19, சனிக்கிழமை

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி பணி துரிதம் - பிரதியமைச்சர் கொத்தலாவல

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 14 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிபாயா நூர்)

கிழக்கு மாகாணத்தில் வீதி அபிவிருத்திப்பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன. மட்டக்களப்பு திருக்கொண்டியா மடுவிலிருந்து பொத்துவில் வரையான வீதி 100 கிலோமீற்றர் அளவில் காபட் வீதியாக செப்பனிட்டு முடிவடையும் நிலையில் உள்ளன என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி பிரதியமைச்சர் நிர்மல கொத்தலாவல தொவித்தார்.

மட்டக்களப்புக்கு இன்று விஜயம் செய்த பிரதியமைச்சர் மட்டக்களப்பிலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிராந்திய அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயெ மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர் கிழக்கு மாகாணத்திலுள்ள மிக முக்கிய பாலங்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் பெரிய பாலங்கள், வீதிகள் அனைத்தும் புனரமைக்கப்பட்டு வருகின்றன. இதே போன்று மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் நிர்மானப்பணிகள் துரிதமாக இடம்பெற்று வருவதாகவும் அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பிரதியமைச்சர்களான ஹிஸ்புல்லா மற்றும் முரளிதரன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாணத்துக்கு பொறுப்பான திட்டப்பணிப்பாளர் தருமரட்னம் உட்பட அதிகாரிகள் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வீதிகள் தொடர்பான கோரிக்கைளும் பிரதியமைச்சரிடம் முன்வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .