2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

அபிவிருத்தித் திட்டங்களில் பல கிராமங்கள் புறக்கணிப்பு;ஆளுநரிடம் புகார்

Super User   / 2010 ஒக்டோபர் 22 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள் எழுச்சித்திட்டத்தின் கீழ் இடம்பெற்று வரும் அபிவிருத்தி திட்ட நடவடிக்கைகளில் பல கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரமவிடம் முறைப்பாடு செய்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்கள் மற்றும் ஓட்டமாவடி, வாழைச்சேனை, கல்குடா,  ஏறாவூர் போன்ற பிரதேசங்களும் இத்திட்டத்தில் உள்வாங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

மீள் எழுச்சித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் இக்கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் இதை மீளாய்வு செய்து குறித்த கிராமங்களையும் இத்திட்டத்தில் உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநரிடம் கேட்டுள்ளார்.

இதேபோன்று நேர்ப் திட்டத்தின் கீழ் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிர்மாணீக்கப்பட்டு வரும் வீடுகள் தொடர்பிலும் மட்டக்களப்ப மாவட்டத்தில் பயனாளிகள் தெரிவு செய்ததில் சிலர் விடுபட்டுள்ளதால் இதையும் மீளாய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநரை கோரியுள்ளதாக மாகாண அமைச்சர் சுபைர் மேலும் தெரிவித்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .