2021 ஜூலை 31, சனிக்கிழமை

காத்தான்குடியில் குப்பைகளை சேகரிக்க நகரசபையினரின் புதிய நடவடிக்கை

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 28 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

காத்தான்குடி பிரதேசத்தில் குப்பை மற்றும் கழிவுகளை கண்டபடி வீதிகளிலும் பொது இடங்களிலும் வீசாமல் அதை உரிய முறையில் சேகரித்து நகர சபையின் சுத்திகரிப்பாளர்கள் வரும் போது அதை அவர்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தினை காத்தான்குடி நகர சபை  நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இதற்காக வீடுகளுக்கும் பொது நிருவனங்களுக்கும் காத்தான்குடி நகர சபையினால் குப்பைகளை சேமிக்கும் குப்பைத்ததொட்டிகளை வழங்கப்பட்டுள்ளன.

காத்தான்குடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட காத்தான்குடி ஆதார வைத்தியசாகைகு இக்குப்பைத்தொட்டிகள் வழங்கும் நிகழ்வு நேற்று காத்தான்குடி நகர சபையில் நடைபெற்றது.

இதன்போது காத்தான்குடி நகர சபையின் பிரதித்தலைவர் எஸ்.எச்.எம்.அஷ்பர் வைத்திய சாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர் எம்.எச்.பசீரிடத்தில் 20 குப்பைத்தொட்டிகளை கையளித்தார்.

இக்குப்பைத்தொட்டிகள் யு.எஸ்.ஜட்.நிறுவனத்தினால் வழங்கப்பட்டதாகும். வீதிகளிலும் பொது இடங்களிலும் குப்பைகளை வீசுவோருக்கெதிராக காத்தான்குடியில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக காத்தான்குடி நகர சபையின் பிரதி தலைவர் அஷ்பர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .