2021 ஜூலை 31, சனிக்கிழமை

படுவான்கரையில் புதிய கல்வி வலயம்; ஜனவரியில் அமைக்க திட்டம்-ஹிஸ்புல்லா

Menaka Mookandi   / 2010 நவம்பர் 02 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, படுவான்கரை பிரதேசத்தில் ஜனவரி மாதத்தில் புதிய கல்வி வலயம் ஒன்றினை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று திங்கட்கிழமையன்று நடைபெற்ற 15மில்லியன் ரூபா செலவில் கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறைக்கட்டிடத்தினை திறந்து வைக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், 'யுத்த சூழ் நிலையின் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களின் கல்வி நிலை பாதிக்கப்பட்டது. தற்போது நாட்டில் அமைதி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் நாட்டின் எந்தப்பாகங்களுக்கும் சென்றும் கல்வியை கற்க முடியும்.
 
வலயங்களுக்கிடையில் கல்வி நிலையில் போட்டி ஏற்படும் போது மாவட்டத்தில் நல்ல கல்விமான்களை உருவாக்கமுடியும். கிழக்கு மாகாணத்திலுள்ள ஆறு பாடசாலைகளுக்கு 43 மில்லியன் ரூபா நிதியினை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி நிலை உயரடைய வேண்டும். இலங்கையிலுள்ள 22மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டம் கல்வியில் முதன்மை மாவட்டமாக முன்னேற்றுவதற்கு அனைவரும் ஒன்றுபட்டுழைக்க வேண்டும்' என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .