2021 ஜூலை 31, சனிக்கிழமை

பாசிக்குடா கடலில் மூழ்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

Super User   / 2010 நவம்பர் 07 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா, ஆர்.அனுருத்தன்)

பாசிக்குடா கடலில் குளிக்கச் சென்ற பதுளை – ஹஸலக்க என்ற பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தரொருவர் நீரில் மூழ்கிய நிலையில் காணாமல் போயுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான சேத்தர பண்டார மெதிவெக (38) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் குடும்பத்தாருடன் விடுமுறையைக் களிப்பதற்காக பாசிக்குடாவிற்கு வந்துள்ளார். இவரின் சடலத்தை தேடும் பணிகள் தொடர்வதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .