2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

வாகரையில் யானை தாக்கி ஒருவர் ஸ்தலத்திலேயே பலி

A.P.Mathan   / 2010 நவம்பர் 17 , மு.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஓமடியாமடு வயற்பிரதேசத்தில் நேற்று இரவு யானை தாக்கியதில் ஸ்தலத்திலேயே ஒருவர் மரணமாகினார்.

வாழைச்சேனை நாசிவன்தீவை சேர்ந்த கந்தையா சுபிரமணியம் (வயது 67) என்பவர் ஓமடியாமடுவிடுள்ள தனது வயலில் காவலுக்கு இருந்த சமயமே யானை தாக்கி மரணமாகியுள்ளார். தனது கடமைகளை முடித்துவிட்டு காவற்குடிலுக்கு முன்பாகவுள்ள நீரோடையில் மாலை 7.20 மணியளவில் குளித்துக் கொண்டிருக்கையில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இவர் இலக்காகி பலியாகியுள்ளார்.

இந்த வயற்பிரதேசமானது வெலிக்கந்தை – பொலனறுவை எல்லை பிரதேசமாகும். இங்கு எந்தவிதமான அடிப்படை வசதிகள் இன்றியும் பாதுகாப்பின்றியும் 200 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி இதற்கு முன்னரும் இப்பிரதேசத்தில் பலர் பலியாகியுள்ளமையை அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியபோது தமக்குரிய பாதுகாப்பினை அவர்கள் உறுதிப்படுத்தவில்லை என இங்குள்ள விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அடிப்படை வசதியில்லாத இக்கிராமத்தில் மேலும் பலரை பலவந்தமாக குடியேற நிர்ப்பந்திப்பதாகவும், அவர்கள் யானையின் அச்சுறுத்தல் காரணமாக குடியேற மறுத்து வருகின்றமையையும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .