2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

வடக்கு கிழக்கு இணைந்தால் வரவேற்போம், ஆனால் அது சாத்தியமில்லை : முதலமைச்சர் சந்திரகாந்தன்

Super User   / 2010 நவம்பர் 17 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ். வதனகுமார்)

வடக்கு கிழக்கு இணைந்த தாயக பூமியை மீட்டுத்தந்தால் வரவேற்போம். ஆனால், அது சாத்தியமில்லை  என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தலைவரும் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் பிரத்தியேக செயலாளராகவும் விளங்கிய குமாரசாமி நந்தகோபன் (ரகு) சுட்டுக்கொல்லப்பட்டதன் 2ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு மட்டக்களப்பு, ஆரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றபோது அதில்  கலந்துகொண்டு உரையாற்றும்போதே சந்திரகாந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

"கடந்த காலத்தில் அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தார்கள். பின்னர் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டுவந்தார்கள். எல்லாம் முடிந்த எந்த போராட்டத்தின் மூலம் தமிழர்களுக்கு உரிமைகள், விடுதலை கிடைக்கும் என்கின்ற பொழுதுதான் நாங்களும் அரசியலுக்கு வந்தோம்.

இந்த கிழக்கு மாகாணத்தை ஆளவேண்டும் என்பதற்காக ஆயுதப்போராட்டத்தில் இருந்து தங்களை உடைத்துக்கொண்டுவந்தவர்கள்இ இன்று தங்களது தேவைகளுக்காக அல்லது எப்படியான கட்டுப்பாடுகளை வைத்தால் ஒரு விடுதலை இயக்கம் வளர்த்தெடுக்கப்படும் அந்த இயக்கம் வெற்றிகொள்ளப்படும் என்பதற்காக கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் எவையோ அவற்றையெல்லாம் துறந்துஇ அவற்றுக்கெதிர்மாறான விடயங்களை செய்துகொண்டு நழுவிப்போன சில புல்லுருவிகளான சில தலைவர்கள் மத்தியிலேஇ எமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக வந்த ரகு அண்ணன் நெஞ்சிக்கு முன்பாக இல்லாமல் முதுகுப்புறமாக இருந்து குத்திக்கொல்லப்பட்ட நாளதனை இன்று நினைவுகூறுகின்றோம்.

நாம் நம்புகின்றவர்கள் நம்பிக்கை வைத்து பழகுகின்றபோது பாசாங்கு செய்து நம்பிக்கைக்கு மாறாக கொண்டுசென்று கொலைசெய்கின்றார்கள்.

ரகு சுட்டுகொல்லப்பட்ட செய்திகேட்டவுடன் ஏன் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்இ எதற்காக சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது எனக்கு அப்போதே தெளிவாக விளங்கியது.

 உண்மையில் இந்த பெரும்பான்மை கட்சிகளின் செயற்பாடுகள் எப்போதும் சிறுபான்மை கட்சிகள் வளர்த்தெடுக்கப்படக்கூடாதுஇ பலமடையக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். அதற்கு எமது சில புல்லுருவிகளையும் பயன்படுத்திவருகின்றார்கள். நாங்கள் எந்த இழப்பையும் சந்திக்க தயாராகவிருக்கின்றோம். எங்களுக்கு ரகு அண்ணனின் இழப்பு பாரிய படிப்பினையை தந்துள்ளது.

நாங்கள் அரசியல் ரீதியான கருத்துகளை மேடையில் பேசுவோம் அல்லது விவாதங்களில் பேசுவோம். அல்லது நாங்கள் வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிரானவர்கள் அல்ல என்கிற விடயங்களை நாங்கள் பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம்.

ஆனால்இ தமிழ் தேசிய கூட்டமைப்பு என் சொல்கின்றது? நாங்கள் வடக்குகிழக்கு இணைந்த தாயகபூமியை மீட்டுத்தருவோம் என கூறுகின்றனர். அவ்வாறு நடந்தால் நாங்களும் அதனை வரவேற்போம். அதேபோன்று இணைப்பதற்கான சாத்தியமான வழி இருக்குமானால் நாங்கள் அது தொடர்பில் சிந்திக்கலாம்.

ஆனால்இ அது சாத்தியம் இல்லையென்பது நாம் வட்டுக்கோட்டை தீர்மானத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடம்.

 ஒரு சமூகத்தை அழிக்கமுடியாது. ஒரு இலட்சியத்தை வகுக்கும்போது அந்த இலட்சியத்தை அடைவதற்கான சரியான வழி காட்டப்படவேண்டும். அதனால்தான் இந்த சமூகம் இந்த நிலையில் உள்ளது.

அன்று வட்டுக்கோட்டை தீர்மானந்தான் தனித்தீர்மானம் என்று முடிவெடுத்த தமிழ் தலைவர்கள் அழிந்துவிட்டாலும்இ இன்று அதற்கு கைகோர்த்து செயற்பட்டவர்கள் உயிரோடு உள்ளவர்கள் கூட நாட்டை பிரிக்க முடியாது ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் தீர்வு என்று பேசுகின்றார்கள். அல்லது ஒன்றுபட்ட இலங்கைக்குள் எவ்வாறான தீர்வு என்று தெரியாமல் தவிக்கின்றனர். ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அப்படியல்ல. தன்னகத்தே ஒரு தீர்வைக்கொண்டே செயற்பட்டுவருகின்றது.

இந்த நிலையில் எதிர்க் கட்சிகளுடன் இணைந்து அடைய முடியாத இலக்கை அடையப்போகின்றோம் என்று எமது வார்த்தைக்கு மரியாதையில்லாமல் செய்யப்போகின்றோமாஇ அல்லது அது அடையமுடியாத இலட்சியம்இ கிழக்கு மாகாணம் பிரிந்துதான் இருக்கும் அங்குள்ள தமிழர்களை ஒருங்கிணைத்து கொண்டு செல்லப் போகின்றோமா என்கிற முடிவுக்கு வந்தாகவேண்டியுள்ளது.

அதற்காகததான் நாங்கள் மிக தெளிவாகச் சொல்கின்றோம். வடக்கு கிழக்குடன் இணைந்திருப்பதற்கான சாத்தியம் சட்டத்தில் இல்லை. அதேபோன்று வடகு;ககிழக்கை இணைத்துக்கொடுங்கள் என்று இந்தியாவோ வேறு எந்த நாடோ சொல்வதுற்கு வலுவும் அதற்கான சந்தர்ப்பமும் இல்லை. இதுதான் உண்மை.

ஆகையால் நாங்கள் தெட்டத்தெளிவாக சொல்கின்ற விடயம் இப்போதிருக்கின்ற சட்ட ஆவனங்கள் அடிப்படையிலும் இப்போதிருக்கின்ற விகிதாசார அடிப்படையிலும் எது எப்படி நடந்தாலும் கிழக்கு மாகாணத்தை வடக்குடன் எங்களால் இணைத்துக்கொள்ளமுடியாது.

இதனடிப்படையில் தான் கிழக்கு மாகாணத்துக்கென தனிப்பெரும் கட்சியாக தமிழ் மக்கள் கட்சியை வளர்த்தெடுத்தோம். இதற்கும் பல்வேறு அழுத்தங்கள் எம்மீது பிரயோகிக்கப்பட்டன.

இந்த மாகாணத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக இந்த மாகாணத்தின் மக்களின் ஒட்டுமொத்த இருப்புக்காக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை வளர்க்கவேண்டிய நிலையில் உள்ளோம். மாற்றுக்கருத்துகள் உடையவர்கள் இருக்கலாம் அவர்களுடனும் பேசவேண்டும். அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் பேசுவதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

பேசுவது அவர்கள் கொண்டுள்ள கொள்கை பிடிப்பால் அல்ல. இலங்கையில் கட்சிகளை ஒன்றினைக்க முடியாது என்பது எங்களுக்கு தெரிந்த விடயம். எனினும்இ தமிழ் மக்களின் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் ஒன்றுபட்டு பேசமுடியாத நிலை உள்ளது என்பது மிகவும் வேதனையான விடயம்.

ஆகவே நாங்கள் தனிப்பட்ட ரீதியாக சம்பந்தன் ஐயாவுக்கோ தனிப்பட்ட ரீதியாக கருணாவுக்கோ எதிரானவர்கள் அல்ல. எமது மாகாணத்தை குழப்புபவர்களுக்கு பொய்யான விவாதங்களை செய்பவர்களுக்கு எதிராகவே நாங்கள் அரசியல் எதிர்கருத்துகளை சொல்கின்றோம் ஒழிய நாங்கள் வெறுமனே பேசி எங்களது வாக்குவங்கிகளை நிரப்ப முயலவில்லை" என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .