2021 நவம்பர் 29, திங்கட்கிழமை

மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் குறைகளைத் தீர்க்குமாறு மீள்குடியேற்ற பிரதி அமைச்சருக்கு இரா துரைரெத்த

Super User   / 2011 மார்ச் 25 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (ரி.லோஹித், எம்.எஸ்.வதனகுமார்)

மீளக்குடியமர்ந்த மக்களின் குறைபாடுகளை நிவர்த்;தி செய்யக் கோரல் எனும் தலைப்பில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்குள்ள குறைபாடுகள் குறித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் முரளிதரனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

 அக் கடிதத்திகன் முழுவடிவம் பின்வருமாறு:

 தமிழ் மக்கள்  யுத்தத்தால் பாதிப்படைந்து சொல்லமுடியாத துன்பத்தை அனுபவிக்கும் வேiளையில்  யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு  நீங்கள் மீள்குடியேற்ற அமைச்சராக நியமனம் பெற்றதையிட்டு தமிழ் மக்களாகிய நாங்கள் சந்தோசமும் மகிழ்ச்சியும்  அடைந்தோம்.  
 நல்ல பல பணிகள் தொடரும் என எண்ணினோம். நீங்களும் விடாமுயற்சியுடன் செயல்படமுனைந்தீர்கள்.    ஆனால், எமது மக்களின் பாதிப்புக்கு ஏற்றவாறு மீள்குடியேற்றப் பணி அமையவில்லை என்பதே எம் மக்களின்  கருத்தாகும்.  

 கிழக்கு மாகாணசபையிலும் மீள்குடியேற்ற அமைச்சு உள்ளது இதற்கு 2011ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் எந்தநிதியும் மத்திய அரசால் ஒதுக்கப்படவில்லை. மேலும் அந்த அமைச்சிற்கு மீள்குடியேற்றம் தொடர்பான அதிகாரங்கள் இல்லை .இருந்திருந்தால் சம்பூர்மக்களின் பிரச்சினை தீர்ந்திருக்கும். இருந்தும் கீழ் குறிப்பிடப்படும் விடயங்களை தங்கள் கவனத்திற்கு கொண்டுவருகின்றோம்.

 (1) 1986 ஆம் ஆண்டு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கச்சைக்கொடி கிராம சேவையாளர் பிரிவில் கெவிளியாமடு  கிராமத்தில்  அண்ணளவாக 104  தமிழ் குடும்பங்கள் இடம்பெயர்ந்தன.  அவைகளில்  30 குடும்பங்கள் மீளக் குடியமர்ந்துள்ளன.  இப்பகுதியில் 30 விவசாயிகள் தங்களது வேளாண்மை செய்கையை ஆரம்பித்துள்ளனர். ஏனையவர்களின்    வயல் நிலங்கள் வேறு ஒரு  சிலரால்  செய்கை பண்ணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இங்கு மீளக்குடியமர்ந்த குடும்பங்களுக்கான தற்காலிக வீடு, நிரந்தர வீடு, தொழிலுக்கான உதவி, வயல்காணிகளை பெற்றுக்கொடுத்தல் போன்ற விடயங்கள்  துரிதமாக செயல்படுத்தப்படவேண்டும் .

(2) 1989 ஆம் ஆண்டு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வலையறவு பாலத்தடி அருகில்   பாரிய  இராணுவ  முகாம்   அமைக்கப்பட்டதால்   அங்கிருந்த 30 குடும்பங்கள் இடம் பெயர்ந்து அருகாமையிலுள்ள உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில்  வாழ்ந்து வருகின்றன. அக்குடும்பத்தவர்கள் மீளக்குடியமர்வதற்கு தயாராக உள்ளனர். அவர்களுக்கான வீட்டுத்திட்டம் விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் .

 (3) செங்கலடி பிரதேச செயலாளர்  பிரிவிலுள்ள ஏறாவூர்  தமிழ் பகுதியில் 1990 அம் ஆண்டு  ஏற்பட்ட யுத்தம் காரணமாக  90 இற்கு  மேற்பட்ட குடும்பங்கள் இடம் பெயர்ந்து  ஏறாவூரிலும், அயற் கிராமங்களிலும்,  வெளிமாவட்டங்களிலும் உள்ள  நண்பர்கள், உறவினர்கள்  வீடுகளில்  தஞ்சமடைந்துள்ளன. அவைகளில் 55 குடும்பங்கள் ஏறாவூர்  கிராமத்தில்  மீண்டும் குடியேற தயாராக உள்ளன. இக்குடும்பத்தவர்களின்  சொத்துக்கள் யாவும் அழிந்து போயுள்ளன. இவர்களுக்கான நிவாரணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

 (4) இத்தோடு  பாதிப்புக்குள்ளான விதவைகள், இளைஞர், யுவதிகள்; அங்கவீனமடைந்தோர்  போன்றோருக்கான திட்டங்கள் சரியானமுறையில் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.

 (5)  1980 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையும் தமிழ், முஸ்லிம், சிங்கள, சமூகத்தவர்கள்  தமது அசையும் அசையா சொத்துக்களை பரஸ்பரம் வாங்கியும் விற்றும் உள்ளனர். அப்படி விற்றவர்கள் அரசியல் அதிகாரத்தின் துணைகொண்டு தாம் விற்ற சொத்துக்களை மீண்டும் பெற முயற்சிப்பது பாரிய குளறுபடிகளை ஏற்படுத்தும். இது இனக்குரோதத்தையும் வளர்க்கும்  செயல்பாடாகவும் உள்ளது உதாரணமாக  வவுணதீவு பிரதேசசெயலாளர் பிரிவில் உள்ள பாவற்கொடிச்சேனை போன்ற கிராமங்களில் மேற்குறிப்பிட்ட பிரச்சனைகள் உருவெடுத்துள்ளன  இப்படிப்பட்ட விடயங்களுக்கு ஒருசில  தரப்பினர்  அச்சுறுத்தல்  விடுக்கின்றனரா ? இது முளையிலே கிள்ளி எறியப்படவேண்டும்.

  (6) இம் மாவட்டத்திற்கு  வளத்தை  நல்கிய  தொழில் பேட்டைகள், உற்பத்திச் சாதனங்கள் மற்றும் சொத்துக்கள், ஆகியவற்றின் விபரங்களை தங்கள் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன் .

 (1) வாழைச்சேனை கடதாசி ஆலை (2) அரசாங்க அச்சகம் (3) அரிசி ஆலைகள் (4) நெற்களஞ்சியங்கள் (5) ஓட்டுத்தொழிற்சாலைகள் (6) சீனிக்கூட்டுத்தாபனம், கரும்பு  செய்கையும் (7) அரச மரக்கூட்டுத்தாபனம்  (8) கரடியனாறு பண்ணை (9) இயற்கை வளம் நிறைந்த வனங்கள்  (10) நீர்பாசனத்துக்குரிய சிறியகுளம்கள் (11) பல்வேறு குடிசைக் கைதொழில்கள்   (12) ஐஸ் தொழிற்சாலைகள் போன்றவையும் இன்னும் பல வளங்களும் அழிவடைந்தும் சிதைவடைந்தும் போய் உள்ளன. இவைகள் யுத்தப் பாதிப்புக்கள் இல்லையா?

 பல இடங்களில்  இடம் பெயர்ந்து  வாழ்ந்து வருபவர்கள் தொடர்பாக: இம் மாவட்டத்திலிருந்து இம் மாவட்டத்திற்குள்  இடம் பெயர்ந்தவர்களினதும் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அகதியாக சென்று மீண்டும் இலங்கை வந்து மீளக்குடியமர்ந்தவர்களினதும். இம் மாவட்டத்திலிருந்து  வன்னிக்குச் சென்று மீண்டும் இங்கு வந்து  மீளக்குடியமர்ந்தவர்களினதும் தேவைகளின் விபரங்கள் பிரதேச செயலாளர் அலுவலகங்களில் பலகாலமாக தேங்கிக்  கிடப்பதனை நாம்  அனைவரும்  நன்கு அறிவோம்.

 கிழக்கு மாகாணசபையில்  மீள்குடியேற்ற  அமைச்சு ஒன்றை  எவ்வித செயற்பாடுகளும்  இல்லாமல் வெறும் பெயருக்கு மாத்திரம் வைத்திருப்பதன் காரணமென்ன  என்று  கேள்வி  கேட்குமளவிற்கு  தமிழ் சமூகம் இப்போது விழிப்படைந்துள்ளது என்பதை யாவரும் உணர்தல் வேண்டும் .

 எனவே நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனிமேலாவது முதலமைச்சர் மாகாண, மத்திய அமைச்சர்கள், மீள்குடியேற்ற அமைச்சர்கள்  போன்றோர்கள் இவைகளை கவனத்தில்  எடுத்து  மீள்குடியோருக்கான தேவைகளை  தீர்த்து  வைக்க முன் வர வேண்டும்.

இக்கடிதத்தின் பிரதி கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் சி.சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .