2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

யானை தாக்கி ஒருவர் காயம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 26 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜதுசன்)

மட்டக்களப்பு, வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பன்சேனைக் கிராமத்தில் இன்று சனிக்கிழமை அதிகாலை வேளையில் யானை தாக்கி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், யானை தாக்கியதில் 5 வீடுகள் சேதமடைந்துள்ளன.

மட்டக்களப்பில் கடந்த வருடமும் இவ்வருடத்தில் முதல் 3 மாதங்களிலும் யானை தாக்குதலுக்கு இலக்காகி 15 பேர் பலியாகியுள்ளதுடன், 19 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும் யானை தாக்குதலில் 108 வீடுகள் முற்றாகவும் 55 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ள அதேவேளை, பல ஏக்கர் தென்னை மரங்களும் பயன்தரு மரங்களும் யானைகளால் சேதமாக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .