Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2011 மார்ச் 27 , மு.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் மனித உரிமை பிரிவு நடத்திய 'மதங்களை மையப்படுத்திய உரிமைகளும் கடமைகளும்' எனும் தலைப்பிலான கருத்தரங்கொன்று நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
மட்டக்களப்பு கத்தோலிக்க மண்டபத்தில் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அருட்தந்தை பேராசிரியர் ரி.எஸ்.சில்வெஸ்டர் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில,; மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சர்வ மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மதகுருமார்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் ஆர்.மனோகரன், புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.சி.ஏ.அஸிஸ் ஆகியோர் கலந்துகொண்டு மனித உரிமைகள் குறித்து கருத்துரை வழங்கினர்.
கிராம மட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் உரிமை பிரச்சினைகள் குறித்து இங்க விரிவாக ஆராயப்பட்டதுடன், அவற்றில் மதகுருமார்களின் பங்கு தொடர்பிலும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
6 hours ago