2021 ஜூலை 26, திங்கட்கிழமை

படிக்காதவர்கள் அரசிலுக்குள் வந்ததால் கல்விமான்களின் பெறுமதியை குறைத்து மதிப்பிடுகின்றனர்: யோகேஸ்வரன

Menaka Mookandi   / 2011 மார்ச் 31 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

'படிக்காதவர்கள்  அரசியலுக்கு வந்ததால்  எதுவும்  விளங்காமல் அதிகாரிகளை அச்சுறுத்துகின்றனர் அப்படிச் செய் இப்படிச் செய் என்று மிரட்டுகின்றனர். திணைக்களத் தலைவர்கள், அதிகாரிகள் எமது கல்விமான்கள் அவர்களது பெறுமதியை குறைத்து மதிப்பிடுகின்றனர்' என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்டக் காரியாலயத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட கணினி உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்,அரசியல் அதிகாரத்தை வைத்துக்கொண்டு சிலர் உழைக்கவும் மற்றவர்களை மிரட்டவும் முயற்சிக்கின்றனர். இவர்கள் அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்ட பின்னர் எவ்வாறு இந்தச் சமூகத்தில் தலைநிமிர்ந்து நடப்பது?

வாக்குக் கேட்பார்கள் வென்றுவிட்டால் வாக்களித்த மக்களை கவனிப்பதில்லை. மீண்டும் வாக்குக் கேட்கும் போதுதான் கும்பிடு போடுவது நான் அப்படிப்பட்டவன் அல்ல. அதிகாரிகளின் நிருவாகத்தில் அனாவசியமாகத் தலையிட மாட்டேன் அவர்கள் தங்களது பணியைச் செய்ய வேண்டும்.

படியாதவர்கள் அரசியலுக்கு வந்தால்  தங்களைப் போலவே கல்விமான்களையும் கருதுகின்றனர்.நான் அரசியலுக்கு விரும்பி வரவுமில்லை வந்துவிட்டு அதனைத் துஸ்பிரயோகம் செய்யவுமில்லை ஆனால் நாய் வேசம் போட்டுள்ளேன் குலைத்துத்தான் ஆகவேண்டும். அதற்காக கடிக்கக் கூடாது.

நான் உழைக்க அரசியலுக்கு வரவில்லை கிடைத்த சந்தற்பத்தை முடிந்தளவு பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்து விட்டு இறுதியில் ஏதோ ஒரு முதியோர் இல்லத்தில் சேர்வதுதான் எனது நோக்கம் எனவும் தெரிவித்தார்.


  Comments - 0

 • ramesh Friday, 01 April 2011 05:56 PM

  இவர் பெரிய படிப்பாளி போல் பேசுகிறார். இவர் முன்பு இளைஞர் விளையாட்டு உத்தியூகத்தராக வேலை செய்தார். இவருக்கும் விளையாட்டுக்கும் என்ன தொடர்பு... இவர் இப்போது பிழை பிடிக்கிறார்.

  Reply : 0       0

  paviththiran Friday, 01 April 2011 08:41 PM

  குறை சொல்லி சொல்லியே இவர்கள் தமது அரசியலை நடாத்தி விடுவார்கள். தாம் செய்யவும் மாட்டார்கள் செய்பவரையும் விட மாட்டார்கள்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .