Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(அப்துல்சலாம் யாசிம்,ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குமான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது.
இதேவேளை, நேற்று வியாழக்கிழமை வாழைச்சேனை பிரதேசத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. மேற்படி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வாழைச்சேனையில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி முன்னெடுப்புகள், தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திகள், பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் என்பன தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இக்கூட்டத்திற்கு வாழைச்சேனை பிரதேச செயலாளர் கிரிதரன், வாழைச்சேனைப் பிரதேசசபைத் தவிசாளர் உதயஜீவதாஸ், திணைக்களத் தலைவர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
.jpg)
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025