2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

பிராந்திய அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

Kogilavani   / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு கோரளைப்பற்று தெற்கு கிரான், கோரளைப்பற்று வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவுகளில் பிராந்திய அபிவிருத்தி ஒருங்கினைப்பு குழுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிழக்கு மாகான முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலமையில் பிரதேச செயலகங்களின்  ஒன்று கூடல் மண்டபங்களில் நடை பெற்றன.

மேற்படி இரு பிரதேச செயலகங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக மேற் கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் ஜாதிக சவிய,  கமநெகும திட்டம் மாகாணத்தினால் குறித்தொதுக்கப்ட்ட அபிவிருத்தி கொடையில் கீழான கிராம அபிவிருத்தித் திட்டம் கிராமங்களைக் கட்டியெழுப்பும் அபிவிருத்தித் திட்டம்,  சமூர்தி அபிவிருத்தித் திட்டம் திரியபியச வீட்டுத் தோட்டத்திட்டம்,  உட்கட்டமைப்பு திட்டம் போன்ற அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் இப்பிரதேசங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவேண்டிய முக்கியப் பிரச்சினைகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் முதலமைச்சரின் கவனத்திற்கு கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பிரதிநிதிகள் கொண்டு வந்தனர்.

மேற்படி அபிவிருத்தி குழு கூட்டங்களில் மட்டக்ளப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,  சீ.யோகேஸ்வரன்,  கிழக்கு  மாகன சபை ஐ.தே.க,  உறுப்பினர் மாசிலாமனி ஆகியோர் வாழைச்சேனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஏனைய இரு கூட்டங்களிலும் கிழக்கு மாகண சபை உறுப்பினர் கூ.பிரசாந்தனஇ; பிரதேச சபைத் தவிசாளர்கள்,  பிரதேச செயலாளர்கள்,  திணைக் களத் தலைவர்கள்,  பொது அமைச்சுக்களின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .