2021 ஜூலை 31, சனிக்கிழமை

கோரளைப்பற்று பிரதேச செயலகத்தின் முத்தமிழ் விழா

Super User   / 2011 ஏப்ரல் 03 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

கோரளைப்பற்று பிரதேச செயலகத்தின் முத்தமிழ் விழாவும் இளம்பரிதி சிறப்பு மலர் வெளியீடும் இன்று ஞாயிற்றுக்கிழமை பேத்தாளை குகநேசன் கலாசரா மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் எஸ்.கிரீதரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்; பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனும் கலந்துகொண்டார்.

பிரதேச செயலக கலாசார பேரவையின் இளம்பரிதி நூல் வெளியீட்டு உரையினை கிழக்கு பல்கலைக்கலக நுன்கலைத்துறை உப தலைவர் பேராசிரியர் செ.யோகராசா நிகழ்த்தினார்.

பிரதேசத்தின் மூத்த கலைஞர்களும் சித்த வைத்தியர்களும் கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட கலாசார போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .