2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

மீன்பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு

Super User   / 2011 ஏப்ரல் 04 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலக்காட்டு வெட்டை பகுதியில் இருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீராவோடை – மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த முஸ்தபா சரிவுத்தம்பி (வயது 65) என்றழைக்கப்படும் ஐந்து பிள்ளைகளின் தந்தையென இவர் இனங்காணப்பட்டுள்ளார்.

பாலக்காட்டுவெட்டை பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற இவர் நேற்றுவரை வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து குடும்ப உறவினர்கள் குறித்த நபரைத் தேடி சென்ற வேளையில் பாலக்காட்டுவெட்டை பகுதியில் அமைந்துள்ள குளம் ஒன்றில் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

மீராவோடை – மாஞ்சோலை பகுதியை வசிப்படமாக கொண்ட இவர் நாவலடி எனும் இடத்தில் சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை வாழைச்சேனை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .