2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத வலைகள், தோணிகள் கண்டுபிடிப்பு

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 11 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத வலைகளைக்கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டவர்களிடமிருந்து நான்கு தோணிகள் மற்றும் சட்டவிரோத வலைகளையும் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக மாவட்ட கடற்றொழில் திணைக்கள பிரதி பணிப்பாளர் டொமினிக் ஜோர்ஜ் தெரிவித்தார்.

நேற்று மாலை ஏறாவூர் வாவி பிரதேசத்தில் பொலிஸாரின் உதவியுடன் அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது தோணிகளும் வலைகளும் கைப்பற்றப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் நாளை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பிரதி பணிப்பாளர் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி 3 இலட்சம் எனத் தெரியவருகின்றது. வலைகளுக்கும் தோணிகளுக்கும் சொந்தக்காரர்கள் தேடப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .