2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

எதிர்வரும் 17 அன்று பொதுச்சபை கூட்டம்

Gavitha   / 2015 பெப்ரவரி 10 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்


கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) காலை 9.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரை காத்தான்குடி அல்மனார் அர் ராஷித் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.


இந்நிகழ்வில், அம்பாறை உதவிப் பிரதேசசெயலாளர் முற்போக்கு சிந்தனையாளர் அஷ்ஷெய்க் ரீ.எம்.எம். அன்ஸார் நளீமி, 'சமகாலத்தில் கதீப்மார் இமாம்களின் பணியும் நடத்தைக் கோலங்களும்' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றுவார்.
2015, 2016ஆம் ஆண்டுகளுக்கான புதிய நிர்வாக சபை உத்தியோஸ்தர்களுக்கான தெரிவும் இடம்பெறும் என செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா தெரிவித்தார்.


கடந்த 17 வருடங்களுக்கு மேலாக இவர்களின் துறைசார் நலன்களின் அர்ப்பணிப்புடன் நிரந்தர அலுவலகம் வருமானம் இன்றி செயற்பட்டு வருகின்றது. இவ்வமைப்பில் 150க்கும் மேற்பட்ட கதீப்மார்களும் இமாம்களும் முஅத்தின்களும் அங்கத்துவம் வகிக்கின்றனர்.


கதீப்மார் இமாம்கள் முஅத்தின்களுக்கு இடர்களின் போது, பல்வேறுபட்ட நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .