2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.இராஜன் செல்வநாயகத்தின் 25ஆவது நினைவு தினம்

Super User   / 2011 மார்ச் 28 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுந்திர கட்சியின் முன்னாள் அமைப்பாளருமான அமரர் பி.இராஜன் செல்வநாயகத்தின் 25ஆவது நினைவு தினம் இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.

மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதி தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ் காசிநாதர் ஆகியோர் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுந்திரக்கட்சியின் அமைப்பாளர் இராஜன் மயில்வாகனத்தின் தலைமையில் மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமரர் பி.இராஜன் செல்வநாயகத்தின் மனைவி மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதன்போது அமரர் பி.இராஜன் செல்வநாயகத்தின் திருவுருவ படத்துக்கு அதிதிகள் மற்றும் குடும்பத்தினர் மலர் மாலை அனுவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அவரது சேவைகளும் இங்கு நினைவு கூரப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .