2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

30 வருடங்களின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விஜயம்

Super User   / 2010 நவம்பர் 01 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்திலுள்ள சில்லிக்கொடியாறு கிராமத்திற்கு 30 வருடங்களின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விஜயம் செய்துள்ளார்.

இப்பிரதேசத்தில் மிகவும் பின் தங்கிய கிராமமான குறித்த கிராமத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா விஜயம் செய்த போது கிராம மக்கள் பலரும் இதனை அவரிடம் தெரிவித்தனர்.

1978ஆம் ஆண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான செல்லையா இராசதுரை தமது கிராமத்திற்கு வருகை தந்த பின்னர் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் வரவில்லை என அம்மக்கள் சுட்டிக்காட்டி, தமது தேவைகளை தொடர்பாக சில கோரிக்கைகளையும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முன்வைத்தனர்.

அத்தேவைகளை தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டம் மூலம் நிறைவேற்றித் தருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா உறுதியளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .