Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 26 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
2004.12.26 திகதியன்று, சுனாமிப் பேரலையில் காணாமல்போய் பின்னர் வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்ட “அபிலாஷ்” என்ற ஆண் சிசுவுக்கு, 9 தாய்மார்கள் உரிமை கொண்டாடியிருந்தனர்.
அப்போதிருந்து “சுனாமி பேபி” என்று அழைக்கப்பட்டு வரும் அபிலாஷ், மரபணுப்பணு பரிசோதனை மூலம் மட்டக்களப்பு - குருக்கள் மடத்தைச் சேர்ந்த ஜெயராசா தம்பதியினரது சிசுவென உறுதிப்படுத்தப்பட்டு, அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
தற்போது அபிலாஷிக்கு 17 வயது. அபிலாஷ் தனது இல்லத்தில் வைத்துள்ள சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தூபியில் பெற்றோர் உறவினர்களுடன் இணைந்து இன்று (26) சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தினார்.
இதன்போது அங்கு வருகை தந்திருந்த வட,கிழக்கு ஒப்பனையாளர் சங்கத்தால் அபிலாஷின் கல்விச் செலவுக்காக ஒரு தொகை நிதியுதவியும் கையளிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
26 minute ago
37 minute ago