Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Mayu / 2024 ஜனவரி 07 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரூ.448 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மட்டக்களப்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிழக்கு மாகாண அஞ்சல் நிர்வாக கட்டட தொகுதி போக்குவரத்து, நெடுந்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் சனிக்கிழமை (06) திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி எம்.எச்எம்.அஸ்லம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், வர்த்தக இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைதலைவருமாகிய சதாசிவம் வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே. முரளிதரன், வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட, அஞ்சல் மா அதிபதி ருவன் சத்துமார மற்றும் திணைக்களங்கள் சார் பல உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
2019ம் ஆண்டு அஞ்சல் திணைக்களத்தின் 448 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அஞ்சல் நிர்வாகத் கட்டடத்தொகுதியின் நிர்மானபணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்த நிலையின் அதன் நிர்மானப்பணிகள் நிறைவடைந்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேரின்பராஜா சபேஷ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
51 minute ago
59 minute ago
1 hours ago