Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஜூலை 26 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நகரசபை முதல்வர், அதன் உறுப்பினர்கள் மற்றும் நகரசபை நிர்வாகத்திற்குரியதான அந்தஷ்தை மலினப்படுத்தும் அதிகார மமதையை அதிகாரிகள் நிறுத்த வேண்டுமென ஏறாவூர் நகர முதல்வர் இறம்ழான் அப்துல் வாஸித் வேண்டுகோள் விடுத்தார்.
ஏறாவூர், நகரசபையின் மாதாந்த அமர்வு நகரசபை கேட்போர் கூடத்தில் நேற்று (25) இடம்பெற்றபோதே, அவர் இந்த விடயத்தை சிலாகித்து உரையாற்றினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
உள்ளுராட்சி மன்றங்களின் கீழ்வரும் மாநகர சபை, நகரசபை மற்றும் பிரதேச சபையின் நிர்வாகத்தையும், அவற்றின் மாநகர, நகர முதல்வர், மற்றும் பிரதேச சபைத் தலைவர், உறுப்பினர்களையும் ஏனைய அரச நிர்வாக அதிகாரிகள் தரங்குறைத்து மதிப்பிடும் போக்கு காணப்படுகின்றது.
உள்ளுராட்சி நிர்வாகத்தை வெறும் குப்பை அள்ளும் நிர்வாகமாக அவர்கள் பார்ப்பதும், செயற்படுவதும் பொது அமர்வுகளில் அவ்வாறே கருத்துக்களை முன்வைப்பதையும் ஒரு மனப்பாங்காகக் கொண்டு சில அதிகாரிகள் செயற்படுகின்றார்கள்.
இந்தப் போக்கு உள்ளுராட்சி நிர்வாகத்தின் செயற்பாடுகளுக்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் அந்தஷ்துக்கும் இழுக்கை ஏற்படுத்துவதாகவுள்ளதுடன், அண்மையில், பிரதம மந்திரியின் ஏறாவூருக்கான வருகையையொட்டிய முன்னாயத்தங்களுக்காக ஏறாவூரில் இடம்பெற்ற உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு தீர்மானமெடுக்கும் மாநாட்டில் நிர்வாக உயரதிகாரியொருவர் ஏறாவூரின் நகர முதல்வரை கிண்டலாக விழித்துப் பேசிய முறை கண்டிக்கத்தக்கது.
இது உறுப்பினர்களின் அந்தஷ்தையும், நகர சபையின் உள்ளுராட்சி மன்றக் கடமைகளையும் கேலிக்குரியதாகப் பார்ப்பதாகவே அமைந்திருந்தது.
இவ்வாறான விடங்கள் இடம்பெறும்போது, அதிகார மமதையுள்ள அதிகாரிகளுக்கெதிராக உள்ளுராட்சியின் உறுப்பினர்கள் தங்களது எதிர்வினையை உடனடியாகக் காட்டத்தயங்கக் கூடாது.' என்றார்.
13 minute ago
14 minute ago
16 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
14 minute ago
16 minute ago
1 hours ago