2025 மே 01, வியாழக்கிழமை

அத்துமீறிய குடியேற்றம் குறித்து அமைச்சரின் கவனத்துக்கு

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 08 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதிகளில், அம்பாறை மாவட்ட பௌத்த பிக்கு தலைமையிலான குழுவால் அபகரிக்கப்படும் காணிகள் குறித்தும் இதனால் அப்பகுதியில் ஏற்படவுள்ள இன முரண்பாடுகள் குறித்தும் மகாவலி அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்‌ஷவின் கவனத்துக்கு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கொண்டு சென்றுள்ளார். 

மகாவலி ‘பி’ வலய அபிவிருத்தித் திட்டங்கள் நடைபெற்று வரும் மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதிகளிலேயே அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பௌத்த பிக்கு தலைமையிலான குழு, அத்து மீறிக் காணிகளை அபகரித்து, விவசாயச் செய்கையில் ஈடுபடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் சாணக்கியன் எம்.பி தெரிவித்தார். 

இதனால் மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், தமிழ்,  சிங்கள இனமுரண்பாடுகள் குறித்தும் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வந்ததுடன், இதன் பின்னணியில் கிழக்கு மாகாண ஆளுநர் இருப்பதாகவும் சாடினார்.  

இவற்றைக் கேட்டறிந்த அமைச்சர் சமல், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து நடவடிக்கை எடுப்பதாகவும் அது குறித்து முடிவுகளை விரைவில் அறிவிப்பதாகவும் சாணக்கியன் எம்.பியிடம் உறுதிமொழி வழங்கியுள்ளார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .