2025 மே 15, வியாழக்கிழமை

அனர்த்த முகாமைத்துவ குழு விசேட கூட்டம்

Editorial   / 2018 நவம்பர் 10 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, ஹஸ்பர் ஏ ஹலீம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்குமாறு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பணிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகம தெரிவித்தார்.

மட்டு. மாவட்டத்தின் வெள்ள நிலமைகள் தொடர்பில் ஆராயும் விசேட அவசரக்கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகம தலைமையில் இன்று(10) பிற்பகல் நடைபெற்றது.

மட்டு.மாவட்டத்தில் கடந்த ஆறு தினங்களில் 1352 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 16632 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மட்டு. மாவட்டத்தில வெள்ள அனர்த்தம் காரணமாக வாகரை, கிரான், ஏறாவூர்ப்பற்று, வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு பிரதேச செயலகங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடிநீர் விநியோகம்,அவர்களுக்கான ஏனைய தேவைப்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாகவும் ஆநனர் இதன்போது தெரிவித்தார்.

அத்துடன், அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு மக்களுக்கான உதவிகளையும் வழங்கவேண்டும் எனவும், அதற்காக அனைத்து தரப்பினரும் உதவவேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .